கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

March 2, 2010, Posted by admin at 10:51 AM

academics கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி? கல்லூரியில் படித்து முடித்தவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழை (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) தொலைத்துவிட்டாலோ, அல்லது இயற்கை சீற்றங்களின்போது அழிந்துவிட்டாலோ,  மாற்று சான்றிதழ் பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.

மாற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கல்லூரி முதல்வரே செயல்படுகிறார்.

மாற்று சான்றிதழ் தொலைந்துவிட்டால் அது பற்றி அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பின்னர் சான்றிதழ் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்கு காவல் அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை பெற்ற பின் மாற்று சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் (தாசில்தார்)மனு மூலம் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்துவிட்டது உண்மை என சான்று அளிப்பார்.

பின்னர் காவல் நிலையம் கொடுத்த சான்றிதழ், தாசில்தார் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணம் ஆகியவற்றுடன் கல்லூரி முதல்வருக்கு மாற்று சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மாற்று சான்றிதழ் வழங்குவார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை தொலைத்துவிட்டால் கடைசியாக படித்த கல்லூரி முதல்வருக்கு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மதிப்பெண் சான்றிதழ் நம்பர், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றை சரிபார்த்து அவர் வழியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை எழுதுவார். அத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்குவார்.

academics கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
Related Posts with Thumbnails

Currently have 20 Comments

  1. நல்ல பயனுள்ள தகவல்களை வாரி வழங்கி கொண்டு இருக்கும் வானூர் ஆன்லைன்.காம்.க்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஏனெனில் தங்கள் படைப்புகள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. ஏதோ ஒரு பதிவு போட்டோமா??? என்று இல்லாமல், ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு தகவல் இல்லாமல் ஏகப்பட்ட தகவல்கள் எல்லோரும் அறிய வேண்டியதாக உள்ளது. தங்கள் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்.

  2. admin says:

    @ பிரவீன்குமார்
    நன்றி திரு.பிரவின்குமார் அவர்களே…

  3. nascle guru says:

    Useful information……keep the good work going…
    regards
    NASCLE Guru

  4. admin says:

    @ nascle guru
    Thanks Mr.nascle guru

  5. henry says:

    unga blog romba nalla iruku

  6. admin says:

    @ henry
    மிக்க நன்றி Henry அவர்களே

  7. Jaleela says:

    ரொம்ப அருமையான பதிவு. எல்லோருக்கும் பயன்படும்

  8. admin says:

    @ Jaleela
    மிக்க நன்றி Jaleela அவர்களே..

  9. Nithi says:

    வணக்கம் சார் வாழ்த்துக்கள்!!!! உங்களது இந்த படைப்பு யூத்புல் விகடன் இல் வந்திருக்கிறது…..தொடரட்டும் உங்களது வெற்றிப்பயணம்……

  10. admin says:

    @ Nithi
    தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.நித்தி அவர்களே…

  11. Thayananth says:

    really Useful info.. Thanks :)

  12. admin says:

    @ Thayananth
    நன்றி Thayananth அவர்களே

  13. K ELAVARASAN says:

    thank you for u r message.it is very very usefull message to somany studens.

  14. admin says:

    @ K ELAVARASAN
    You are Welcome Mr. Elavarasan

  15. si.kalaikumar says:

    நல்ல பயனுள்ள தகவல்

  16. admin says:

    @ si.kalaikumar
    மிக்க நன்றி திரு. si.kalaikumar அவர்களே

  17. நல்ல பயனுள்ள தகவல்கள்… நன்றி!

    -
    DREAMER

  18. admin says:

    @ HARESH NARAYAN

    நன்றி HARESH NARAYAN அவர்களே

  19. khaja mohaideen says:

    It’s very useful for everybody….

  20. admin says:

    @ khaja mohaideen
    Thank you Mr. khaja mohaideen.

Leave a Reply








Security Code:

பிரிவுகள்

புதுவை.காம்

 
கணிணி தொழில்நுட்ப தகவல்களை
தாங்கி வரும் தமிழ் இணையதளம்
 
 
   
download vanguard the movie  
Untitled Document
 
                                             © 2010 vanuronline.com All Rights Reserved   Home | About Us | Privacy Policy | Contact Us